சென்னை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.50 ஆயிரம் மோசடி செய்த தம்பதி...!

சென்னை அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.50 ஆயிரம் மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.50 ஆயிரம் மோசடி செய்த தம்பதி...!
Published on

சென்னை,

வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் அமுதா (26) சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்,

அமுதா குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது நண்பர் மூலமாக அறிமுகமான அஜய் ராஜேஷ் தான் சிங்கப்பூரில் வேலை செய்வதாகவும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறியதால் ரூபாய் ஐம்பதாயிரத்தை சென்ற வருடம் நவம்பர் மாதம் கூகுள் பேமூலம் அனுப்பியுள்ளார்,

பத்து மாதங்கள் ஆகியும் வேலை வாங்கி தராததால் அமுதா, அஜய் ராஜேசிடம் தான் அனுப்பிய பணத்தை திரும்பி கேட்டு போது தன்னை ஆபாசமான வார்தைகளிள் திட்டியதாக,இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.

இதனையடுத்து தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் சைபர் செல் சிறப்பு குழுவை சேர்ந்த ஆய்வாளர் கலைச்செல்வி, உதவி ஆய்வாளர் சென்பகவள்ளி ஆகியோர் கூகுள் பே மூலம் பணத்தை அனுப்பிய வங்கி கணக்கின் எண்ணை கொண்டு விசாரனை நடத்தியதில் அஜய் ராஜேஷ் மனைவி பாரதி (26) வங்கி கணக்கு என்பதை கண்டு பிடித்தனர்.

இதனையடுத்து பெரம்பலூர் மாவட்டம் வயலூர் பகுதியில் மோசடிக்கு உடந்தையாக இருந்த அஜய் ராஜேஷ் மனைவி பாரதியை கைது செய்த போலீசார் குரோம்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரனையில் பலரிடம் இது போன்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார் பாரதியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் முக்கிய குற்றவாளியான சிங்கப்பூரில் உள்ள அஜய் ராஜேசை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com