சென்னை: ஆவடியில் ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு..!

சென்னை அடுத்த ஆவடியில் ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார்.
சென்னை: ஆவடியில் ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு..!
Published on

சென்னை,

சென்னை அடுத்த ஆவடியில் ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ் என்பவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். 25 வயதான ஆகாஷ் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

நெமிலிச்சேரியை சேர்ந்த ஆகாஷ் நடுக்குத்தகை தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பணியாற்றி வந்தார். மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இவர், தற்போது மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற வேண்டும் என கடுமையாக பயிற்சி செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 22-ம் தேதி ஆகாஷ் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து ஆகாஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆகாஷ் இன்று உயிரிழந்தார். அதிக அளவில் ஸ்டெராய்டு ஊசி செலுத்திக் கொண்டதால் அவருடைய 2 கிட்னியும் செயல் இழந்த நிலையில், உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாநில அளவிலான ஆணழகன் போட்டிகளுக்கு தயாராகி வந்த நிலையில் ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com