சென்னை: இளம்பெண் அருகே நிர்வாணமாக தூங்கிய நபர்...! அறை மாறியதால் ஏற்பட்ட விபரீதம்..!

திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் ஈரோடு மாவட்டம் குப்பச்சி பாளையத்தை சேர்ந்த அரசு ஊழியர் பொன்னுசாமி என்பது தெரியவந்தது
சென்னை: இளம்பெண் அருகே நிர்வாணமாக தூங்கிய நபர்...! அறை மாறியதால் ஏற்பட்ட விபரீதம்..!
Published on

சென்னை

சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த  இளம் பெண்( 26) இவர் தனியாக அறை எடுத்து தங்கியுள்ளார். ஐ.டி துறையில் வேலை செய்து கொண்டே அரசு வேலைக்காக படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அந்த பெண் தூக்க அசதியில் அறையின் கதவை திறந்து போட்டு தூங்கியுள்ளார்.

காலையில் எழுந்து பார்த்தபோது, தனது அருகில் ஒரு ஆண் படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதுவும் அந்த ஆண் நிர்வாண நிலையில் படுத்திருப்பதை கண்டு கூச்சலிட்டுள்ளார்.பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் நிர்வாணமாக படுத்திருந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படத்தனர்.

இது குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் ஈரோடு மாவட்டம் குப்பச்சி பாளையத்தை சேர்ந்த அரசு ஊழியர் பொன்னுசாமி என்பது தெரியவந்தது. இளம் பெண் தங்கியிருக்கும் அதே குடியிருப்பில் தங்கியிருக்கும் தனது உறவினரை பார்க்க பொன்னுசாமி சென்னை வந்துள்ளார்.

அவர் இரவு குடி போதையில் உறவினரின் அறைக்கு செல்வதற்கு பதிலாக, திறந்திருந்த இளம் பெண்ணின் அறைக்கு சென்று நிர்வாணமாக தூங்கியது தெரிய வந்தது. இந்த பரபரப்பு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பொன்னுசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com