2027-ல் திறப்பு?... சென்னை விமான நிலைய 3-வது முனைய கட்டுமான பணிகள் தீவிரம்

அதிநவீன வசதிகளுடன் தயாராகி வரும் புதிய முனைய பணிகள் 2026 மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
2027-ல் திறப்பு?... சென்னை விமான நிலைய 3-வது முனைய கட்டுமான பணிகள் தீவிரம்
Published on

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த 3-வது முனைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, விமான நிலையத்தை விரிவுபடுத்த இந்திய விமான நிலைய ஆணையம் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் தற்போது ஆண்டுக்கு 3 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் கையாளப்படுகின்றனர். புதிய முனையம் செயல்பாட்டிற்கு வந்த பின், ஆண்டுக்கு 3.5 கோடிக் கும் அதிகமான பயணிகளை கையாளும் திறன் உருவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிநவீன வசதிகளுடன் தயாராகி வரும் புதிய முனைய பணிகள் 2026 மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது சுமார் 40 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக கூறப்படு கிறது. பணிகளை விரைந்து முடித்து, 2027-ம் ஆண்டு தொடக் கத்தில் புதிய 3-வது முனையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித் தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com