பயணிகள் குறைவால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடியது

தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கு காரணமாக, பயணிகள் வரவு குறைவால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
பயணிகள் குறைவால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடியது
Published on

ஆலந்தூர்,

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்த மாதம் 4-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன்காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.

சென்னை உள்நாட்டு முனையத்தில் வழக்கமாக சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்வார்கள். ஆனால் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற 29 விமானங்களில் சுமார் 2 ஆயிரம் பேரும், பிற நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 29 விமானங்களில் 2,600 பேரும் என மொத்தம் 4,600 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர்.

அதிலும் குறிப்பாக சென்னையில் இருந்து கோவை செல்லும் விமானத்தில் 8 பேரும், திருவனந்தபுரத்துக்கு 11, திருச்சிக்கு 17, மதுரைக்கு 23, டெல்லிக்கு 33 பேர் மட்டும் பயணம் செய்தனர். சென்னைக்கு வந்த விமானங்களிலும் பல விமானங்கள் குறைந்த பயணிகளுடன் காலியாகவே வந்தன. இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையம் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com