

செனனை,
சென்னை - அரக்கோணம் ஏ.சி. மின்சார ரெயில் கட்டணத்தை குறைக்க தெற்கு ரெயில்வே பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே புதிதாக அறிமுகப்படுத்தப்பட் டுள்ள குளிரூட்டப்பட்ட (ஏ.சி.) புறநகர் மின்சாரரெயிலின் டிக்கெட் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகப் பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, கட்டணத்தைக் குறைப்பது குறித்து தெற்கு ரெயில்வே தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடை யேயான ஏ.சி. மின்சார ரெயில் சேவையானது கடந்த அக்டோபர் 23ஆம் தேதி முதல் சோதனைமுறையில் தொடங்கப்பட்டது.
இந்த ரெயிலில் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் வரை செல்வதற்கு ரூ.90 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், திருவள்ளூருக்கு அடுத்த நிலையமான எகாட்டுருக்குச் செல்ல கட்டணம் திடீரென ரூ.185 ஆக உயர்கிறது.
அதேபோல் கடம்பத்தூருக்கு ரூ.200, செஞ்சிபானம் பாக்கம் முதல் மணவூர்வரை ரூ.205, திருவாலங்காடு மற்றும் மோசூருக்கு ரூ.215, புளியமங்கலம் மற்றும் அரக்கோணத்திற்கு ரூ.230 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் வரை மட்டுமே புறநகர் ரெயில் கட் ட ண முறை பின்பற்றப்படுவதாகவும், அதற்கு அடுத்தடுத்த நிலையங்களுக்கு விரைவு ரெயில் (எக்ஸ்பிரஸ்) கட்டண விகிதம் அமல்படுத்தப்படுவதாலேயே இந்தக் கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும்ரெயில்வே அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
சென்ட்ரலில் இருந்து 69 கி.மீ தொலைவில் உள்ள அரக்கோணத்திற்கு முழுப் பயணக்கட்டணமாக ரூ.230 வசூலிக்கப்படும் நிலையில், 48 கி.மீ தொலைவில் உள்ள ஆவடி அரக்கோணம் இடைப்பட்ட பகுதிக்கே பயணிகள் ரூ.200 செலுத்த வேண்டியுள்ளது.
அதேவேளையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் ஏ.சி.மின்சாரரெயி லில் சுமார் 59 கி.மீ தூரப் பயணத்திற்கு ரூ.105 மட் டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டண உயர்வு தொடர் பாகப் பயணிகளிடமிருந்து ஏராளமான கோரிக்கைக ளும் புகார்களும் வந்துள்ள தாகத் தெரிவித்த சென்னை ரெயில்வே கோட்ட அதி காரி, இந்த விவகாரம் குறித்து ரெயில்வே வாரியத்தின்கவனத்திற்கு எடுத்துச்செல்லப் பட்டுப்பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.