சென்னை: 13 டன் செம்மரக்கட்டைகளை மலேசியாவுக்கு கடத்த முயற்சி - 3 பேர் கைது

13 டன் செம்மரக்கட்டைகளை, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை: 13 டன் செம்மரக்கட்டைகளை மலேசியாவுக்கு கடத்த முயற்சி - 3 பேர் கைது
Published on: 

சென்னை,

மலேசியாவுக்கு கப்பலில் கடத்த முயன்ற ரூ.8 கோடி மதிப்புள்ள 13 டன் செம்மரக்கட்டைகளை, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியாவுக்கு கடத்தல்

சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் மலேசியாவுக்கு சட்டவிரோத மாக செம்மரக்கட்டைகள் கடத்துவதற்கு தயாராக உள்ளதாக, சென்னை மண்டல வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில், வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மாறுவேடத்தில் சென்னை துறைமுகத்தில் இருந்த கப்பலில் ஏற்றும் பொருட்களை கடந்த 6-ந்தேதி முதல் தீவிரமாக கண்காணித்தனர். 10-ந்தேதி வரை இந்த ரகசிய கண் காணிப்பு நடந்தது.

இதில் மலேசியாவுக்கு செல்லும் ஒரு கப்பலில் செம்மரக்கட்டைகள் 'லேமினேட் பேப்பர் கட்டுகள்' என்ற பெயரில் கன்டெய்னரில் ஏற்றப்பட்டு, பின்னர் அந்த கன் டெய்னர்கள் கப்பலிலும் ஏற்றப்பட்டுகொண்டிருந்தன. அந்த கன்டெய்னர்களில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

13 டன் பறிமுதல்

அப்போது அவற்றில் செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. அந்த கன்டெய்னர்களில் இருந்து ரூ.8 கோடி மதிப்புள்ள 13 டன் செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மிகப்பெரிய கடத்தல் கும்பல் கைகோர்த்துக்கொண்டு இந்த செம்மரக்கட்டைகளை பேப்பர் கட்டுகள் என்ற பெயரில் கடத்தி செல்ல முற்பட்டது தெரியவந்தது.

செம்மரக்கட்டைகளை காடுகளில் இருந்து தயார் செய்து, ஒரு கும்பல் சென் னைக்கு லாரிகளில் ஏற்றி கொண்டுவந்தது. அந்த செம்மரக்கட்டைகளை ஒரு குறிப்பிட்ட குடோனில் இன்னொரு கும்பல் பதுக்கி வைத்தது. 3-வது கும்பல் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போர்வையில் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

இந்த கும்பலை சேர்ந்த 3 கடத்தல்காரர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் இதுபோல் ஏற்கனவே செம்மரக்கட்டைகளை கடத்தி சென்றார்களா? என்பது குறித்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X