

சென்னை,
சென்னை கடற்கரை- விழுப்புரம் வழித்தடத்தில் கோடம்பாக்கம்-பரங்கிமலை ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11.05 மணி முதல் நாளை மறுநாள் (சனிக்கி ழமை) அதிகாலை 3.05 மணி வரையில் (4 மணி நேரம்) பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
* சென்னை கடற்கரையில் இருந்து நாளை இரவு 11.40, 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
* கூடுவாஞ்சேரியில் இருந்து நாளை இரவு 11.20 மணிக்கு புறப் பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும், செங்கல்பட்டிலிருந்து நாளை இரவு 11 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.