சென்னை கடற்கரை-திருவண்ணாமலை பயணிகள் ரெயில் ரத்து

சென்னை கடற்கரை-திருவண்ணாமலை இடையிலான பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அரக்கோணம்-ஜோலார்பேட்டை வழித்தடத்தில் உள்ள காட்பாடி பணிமனையில் வரும் 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அந்த வழித்தடத்தில் உள்ள ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* காட்பாடியில் இருந்து வரும் 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் ரெயிலும் (வண்டி எண்.67210), மறுமார்க்கமாக, திருப்பதியில் இருந்து இதேதேதியில் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் பயணிகள் ரெயிலும் (67209) ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை கடற்கரையில் இருந்து இதேதேதியில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் பயணிகள் ரெயில் (66033) ரத்து செய்யப்படுகிறது.

* திருவண்ணாமலையில் இருந்து வரும் 21 மற்றும் 24 ஆகிய தேதிகளில் காலை 4.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் பயணிகள் ரெயில் (66034) ரத்து செய்யப்படுகிறது.

* அரக்கோணத்தில் இருந்து வரும் 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் பயணிகள் ரெயில் (66057), சேவூர்-காட்பாடி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

* விழுப்புரத்தில் இருந்து வரும் 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் பயணிகள் ரெயில் (66026), வேலூர்-காட்பாடி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com