சென்னை: சுடுகாட்டில் உடலில் காயத்துடன் வாலிபர் உடல் மீட்பு- போலீஸ் விசாரணை

சென்னை வானகரம், மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள சுடுகாட்டில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக திருவேற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சென்னை: சுடுகாட்டில் உடலில் காயத்துடன் வாலிபர் உடல் மீட்பு- போலீஸ் விசாரணை
Published on

சென்னை,

சென்னை வானகரம், மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள சுடுகாட்டில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.

அப்போது அந்த வாலிபரின் முகம் உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்தது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக அந்த வாலிபர் உடலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது திருவேற்காட்டைச் சேர்ந்தவர் வீரா (வயது 30) என்பதும், கூலி வேலை செய்து வந்ததும் தெரிந்தது.

அந்த வாலிபர் குடிபோதையில் நடந்து செல்லும்போது தவறி விழுந்ததில் முகத்தில் காயம் ஏற்பட்டு இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் திருவேற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com