சென்னை புத்தகக் காட்சி நீட்டிப்பா? - பபாசி விளக்கம்

சென்னை புத்தகக் காட்சி திட்டமிட்டபடி ஜனவரி 12-ம் தேதியுடன் நிறைவடையும் என்று பபாசி செயலர் கூறியுள்ளார்.
சென்னை புத்தகக் காட்சி நீட்டிப்பா? - பபாசி விளக்கம்
Published on

சென்னை,

பபாசி நடத்தும் 48-வது புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், கடந்த டிசம்பர் 27-ந்தேதி தொடங்கியது. இந்த புத்தகக் காட்சி வருகிற 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இங்கு சுமார் 900 அரங்குகள் அமைக்கப்பட்டு, 10 சதவீதம் தள்ளுபடியுடன் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. புத்தகக் காட்சியை பார்வையிட நுழைவுக்கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இந்த புத்தகக் காட்சி நடைபெறுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படிக்கக்கூடிய அனைத்து புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கியம், வரலாறு, மொழிபெயர்ப்பு என பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் புத்தகக் காட்சிக்கு வருகை தருகின்றனர்.

சென்னை புத்தகக் காட்சி தேதி நீட்டிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள பபாசி செயலர் முருகன், "சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் உண்மையல்ல. சென்னை புத்தகக் காட்சி திட்டமிட்டபடி, ஜனவரி 12-ம் தேதியுடன் நிறைவடையும்" என்று கூறியுள்ளார். இன்னும் 3 நாள்களே இருப்பதால் வாசகர்கள் திரளாக வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com