சென்னை: பிராட்வே பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும் என அறிவிப்பு


சென்னை: பிராட்வே பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Jan 2026 1:54 AM IST (Updated: 6 Jan 2026 1:55 AM IST)
t-max-icont-min-icon

பேருந்து நிலைய மாற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை,

பிராட்வே பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும் எனவும், நிர்வாக காரணங்களால் பேருந்து நிலைய மாற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாகவும் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக்கழகத்தின் ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

“பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் 07.01.2026 முதல் தீவுத்திடல் மற்றும் ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களால் இந்த பேருந்து நிலையம் மாற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும். பிராட்வே பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story