சென்னை: கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் விபத்து; பெண்கள் காயம்

விபத்து பகுதிக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
சென்னை: கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் விபத்து; பெண்கள் காயம்
Published on

சென்னை,

திருவொற்றியூரில் இருந்து ராமாபுரம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, சென்னை கிண்டியில் கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்றபோது, சாலை பிரிப்பானில் அந்த கார் மோதி விபத்தில் சிக்கியது.

இதனால், காரில் பயணித்த பெண்கள் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் வலியால் அலறி துடித்தனர். இதனை தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்டனர். சம்பவ பகுதிக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com