சென்னை: மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த கார் - அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த கார் - அதிர்ச்சி சம்பவம்
Published on

சென்னை,

சென்னையின் கொருக்குப்பேட்டையில் உள்ள மேம்பாலத்தில் இன்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 3 பேர் பயணித்தனர்.

மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கார் எஞ்சினில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த 3 பேரும் மேம்பாலத்தில் காரை நிறுத்திவிட்டு அதில் இருந்து கீழே இறங்கினர். பின்னர், கார் எஞ்சினில் பற்றிய தீ கார் முழுவதும் பரவியது. கார் தீப்பற்றி எரிந்தது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் கார் முழுவதும் எரிந்து தீக்கிரையானது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com