அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சம்மன்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சம்மன்
Published on

சென்னை,

அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் மோசடி செய்ததாக கூறப்பட்ட வழக்கில் கடந்த 14-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கூறியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. தற்போது அவரது காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அடுத்த கட்ட விசாரணை நடத்த முடியாத நிலையில் உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு இருப்பதாக அவரது மனைவி மேகலா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய 120 பேருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் ஜூலை 6-ம் தேதி உரிய ஆவணங்களுடன் ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராக மத்திய குற்றப்பிரிவு உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.62 கோடி மோசடி என புகார் எழுந்துள்ள நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com