

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சாலிமாரில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.02841), நாளை (திங்கட்கிழமை), 9, 16, 23, 30 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, சென்னை சென்டிரலில் இருந்த அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.20 மணிக்கு சாலிமார் செல்லும் சிறப்பு ரெயில் (02842), வருகிற 4, 11, 18, 25, ஏப்ரல் 1 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.