சென்னை - சந்திரகாச்சி சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

சென்னை சென்டிரல் - சந்திரகாச்சி இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் - மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சந்திரகாச்சிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த சிறப்பு ரெயில் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரலில் இருந்து ஜூன் 20, 27 மற்றும் ஜூலை 4-ந் தேதிகளில் (சனிக்கிழமை) இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06077) 3-வது நாள் காலை 6.45 மணிக்கு சந்திரகாச்சியை சென்றடையும் வகையில் 3 நாட்கள் சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மறுமார்க்கத்தில், சந்திரகாச்சியில் இருந்து ஜூன் 22, 29 மற்றும் ஜூலை 6 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில் மறுநாள் மாலை 4.45 மணிக்கு எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரலை வந்தடையும் வகையில் 3 நாட்கள் சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுவிட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com