சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி

சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி
Published on

சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய கமிஷனராக அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பதவியில் இருந்து மாற்றப்பட்ட காவல் ஆணையர் அருண் வாக்குப் பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்த பணியிலும் ஈடுபட மாட்டார் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

.புதிய கமிஷனாராக நியமனம் செய்யப்பட்ட அபின் தினேஷ் மோடக் தாம்பரம் போலீஸ் கமிஷனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை காலையில் அவர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அபின் தினேஷ் மோடக் மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர். மெக்கானிக் என்ஜினீயரிங் படித்த இவர், 1997-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ்.அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தாம்பரம் கமிஷனராக பணியாற்றியபோது, இவர் நேர்மையாக பணியாற்றியவர் என்ற பாராட்டை பெற்றுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com