சென்னை: பஸ் நிறுத்தத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

விசாரணைக்கு பின்னர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை: பஸ் நிறுத்தத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
Published on

சென்னை,

சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பஸ் நிறுத்தத்தில் 19 வயதுடைய கல்லூரி மாணவி, தனது தோழியுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி கூச்சலிட்டதால் பொதுமக்கள் திரண்டனர். இதனால் அந்த நபர் மாணவிக்கு கொலைமிரட்டல் விடுத்து விட்டு தப்பிச் சென்றார்.

இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவி அளித்த புகாரின்பேரில் மயிலாப்பூர் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது. பட்டினம்பாக்கம் ஆர்.ஏ.புரத்தை சேர்ந்த மதன் (வயது 39) என்பது தெரிய வந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com