சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வரும் திங்கள் முதல் ஆய்வு செய்ய திட்டம்

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வரும் திங்கள் முதல் ஆய்வு செய்ய திட்டம்
Published on

சென்னை,

நெல்லையில் உள்ள பள்ளியில் சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது பள்ளிகளில் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து இம்மாத இறுதிக்குள் அறிக்கை அளிக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் வரும் திங்கள்கிழமை முதல் 10 குழுக்களை கொண்டு ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com