சொத்து வரி வசூலை சென்னை மாநகராட்சி 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சொத்து வரி வசூலை சென்னை மாநகராட்சி 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சொத்து வரி வசூலை சென்னை மாநகராட்சி 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சியின் "சொத்து வரி வசூல்" அறிவிப்பைத் திரும்பப் பெற்று, இந்த வரி வசூலை குறைந்தபட்சம் இன்னும் ஆறு மாதத்திற்காவது தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;-

தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி வரை நீடிக்கின்ற நிலையில், நிலுவையில் உள்ள மற்றும் இந்த ஆண்டிற்கான சொத்து வரியை உடனடியாக எவ்வித தாமதமும் இன்றி செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

கடந்த மார்ச் மாதம் முதல் சென்னையிலிருந்து வெளியூர் போனவர்கள் திரும்பி வரவில்லை. வேலை, தொழில், சுய தொழில், வியாபாரம் உள்ளிட்ட அனைத்து வருமானத்தையும் இழந்துள்ளார்கள். தங்கள் வாழ்க்கையை இனி ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டுமோ என்ற மிகப்பெரிய அச்சத்தில் சென்னைவாசிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே சென்னை மாநகராட்சி இந்த வரி வசூலை குறைந்தபட்சம் இன்னும் ஆறு மாதத்திற்காவது தள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com