சென்னை: கூடுதல் பணம் வசூலித்த இனிப்பகத்திற்கு கோர்ட்டு நூதன தீர்ப்பு

ஒரு கிலோ இனிப்பை, மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி இனிப்பகத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னை: கூடுதல் பணம் வசூலித்த இனிப்பகத்திற்கு கோர்ட்டு நூதன தீர்ப்பு
Published on

சென்னை,

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல இனிப்பகத்துக்கு எதிராக ரவிசங்கர் என்பவர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர், கால் கிலோ பாதாம் பிஸ்தா ரோல் வாங்கியுள்ளார். இதற்கு ரூ.425 பணம் பெறுவதற்கு பதிலாக ரூ.450 வசூலித்துள்ளனர் என இனிப்பகம் மீது மனுவில் புகார் அளித்தார்.

இனிப்புக்கு கூடுதலாக ரூ.25 வசூலித்ததில் மன உளைச்சலுக்கு ஆளானேன் என தெரிவித்த அவர், ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

இதனை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு, மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளருக்கு ஒரு கிலோ இனிப்பை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி இனிப்பகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம், திருப்பி அளிக்கப்பட்டபோதும், இனிப்பகத்தின் செயல்பாடு, சேவை குறைபாட்டை காட்டுகிறது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com