சென்னை: பல் மருத்துவக்கல்லூரி பேராசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பல் மருத்துவக்கல்லூரி பேராசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சென்னை: பல் மருத்துவக்கல்லூரி பேராசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்பு
Published on

சென்னை,

சென்னை அடுத்த பல்லாவரத்தில், பல் மருத்துவக்கல்லூரி பேராசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல் மருத்துவக்கல்லூரி பேராசிரியையான தனலட்சுமி பல்லாவரம் பாரதி நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் தனலட்சுமியின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு, புகை வந்துள்ளது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதைத் தொடர்ந்து வீட்டில் எரிந்த நிலையில் தனலட்சுமி சடலமாக மீட்கப்பட்டார். ஏ.சி. வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது தனலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com