சென்னை: டாஸ்மாக் கடையில் தகராறு.. ஹார்டுவேர் கடை ஊழியர் அடித்து கொலை

ஹார்டுவேர் கடை ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: டாஸ்மாக் கடையில் தகராறு.. ஹார்டுவேர் கடை ஊழியர் அடித்து கொலை
Published on

சென்னை,

சென்னை குரோம்பேட்டை ஆதம் நகரை சேர்ந்தவர் பரந்தாமன். இவர் வடபழனியில் உள்ள ஹார்டுவேர் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், டாஸ்மாக் கடைக்கு பரந்தாமன் மது அருந்த சென்றுள்ளார். அப்போது பரந்தாமனிடம் மது போதையில் இருந்த மூன்று பேர் வீண் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர்.

மூன்று பேரும் சேர்ந்த பரந்தாமனை சரமாரியாக தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரந்தாமன் சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டு மூன்று பேரையும் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com