சென்னை மாவட்ட கலெக்டர் திடீர் மாற்றம்...!

சென்னை மாவட்ட கலெக்டராக எஸ்.அமிர்த ஜோதி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Published on

சென்னை,

கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா, சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் பிற வருவாய் சேவைகளைப் பெற வந்த பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் சென்னை மாவட்ட கலெக்டர் விஜயராணி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, சென்னை மாவட்டத்தின் புதிய கலெக்டராக கூட்டுறவு, உணவுத் துறை இணைச் செயலாளராக இருந்த அமிர்த ஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எனினும், விஜயராணிக்கான பொறுப்பு ஏதும் அறிவிக்கப்படவில்லை. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. முதல்-அமைச்சர் ஆய்வு செய்த சில மணி நேரங்களிலேயே அதுவும் பிரதமர் மோடி இன்று சென்னை வரவுள்ள நிலையில், கலெக்டர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com