சென்னை ஈ.சி.ஆர். கடற்கரையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் - தமிழக அரசு பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு


சென்னை ஈ.சி.ஆர். கடற்கரையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் - தமிழக அரசு பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
x

விதிமீறல் செய்தவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு, கரிக்காட்டுக்குப்பம் உள்ளிட்ட கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் விதிகளை மீறி பங்களாக்கள் கட்டப்பட்டுள்ளதாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் செங்கல்பட்டு கலெக்டர், திருப்போரூர் தாசில்தார், கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை ஆணைய குழுவினர், முட்டுக்காடு பகுதியில் விதிமீறல் உள்ளதா? என நேரில் ஆய்வு செய்ததாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதில் விதிமீறல் செய்தவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை ஈ.சி.ஆர். கடற்கரையை ஒட்டிய பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயம், இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 4-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

1 More update

Next Story