

சென்னை,
சென்னை வியாசர்பாடி சஞ்சய்நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 69). இவர் மூலிகை பொருட்களை வைத்து மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் நேற்று காலை சென்னையிலிருந்து ஆவடிக்கு மூலிகை பொருட்கள் வாங்க ரெயிலில் பயணம் செய்தார்.
அண்ணனூர் ரெயில் நிலையத்தில் இறங்கிய அவர், அங்கு அருகிலுள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ஆவடி ரெயில்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.