சென்னை மின்சார ரெயில் விபத்து: ஓட்டுநர் மீது பாய்ந்த நடவடிக்கை

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் விபத்துக்குள்ளான மின்சார ரெயிலை ஓட்டிவந்த லோகோ பைலட் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மின்சார ரெயில் விபத்து: ஓட்டுநர் மீது பாய்ந்த நடவடிக்கை
Published on

சென்னை,

கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி மாலை 4.30 மணியளவில் பணிமனையில் இருந்து கடற்கரை ரெயில் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்ட மின்சார ரெயில் கடற்கரை ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் ஏறி அங்குள்ள கடைகளில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த மின்சார ரெயிலை பவித்ரன் என்ற லோகோ பைலட் ஓட்டி வந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக பவித்ரன் மீது சென்னை எழும்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் ரெயில்வே அதிகாரிகள் 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு விபத்து தொடர்பான விவரங்களையும் விபத்துக்கான காரணங்களையும் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி லோகோ பைலட் பவித்ரன் ரெயில்வே நிறுவனத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து விபத்து குறித்த முழுமையான அறிக்கை விபத்து நடந்ததிலிருந்து 3 மாத காலத்திற்குள்ளாக தாக்கல் செய்யப்படும் என்றும் அதன்பின்பு போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளின் அடிப்படையில் அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com