சென்னை: மின்சார ரெயில் படிக்கட்டு உடைந்து நடைமேடையில் உரசல்; பயணிகள் அதிர்ச்சி

ரெயில்வே ஊழியர்கள் சேதமடைந்த படிக்கட்டை சீரமைத்த பிறகு அந்த ரெயில் மீண்டும் கும்மிடிப்பூண்டிக்கு புறப்பட்டு சென்றது.
சென்னை:  மின்சார ரெயில் படிக்கட்டு உடைந்து நடைமேடையில் உரசல்; பயணிகள் அதிர்ச்சி
Published on

பெரம்பூர்

சென்னையில் மின்சார ரெயில் படிக்கட்டு உடைந்து நடைமேடையில் உரசி சென்றது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை சென்டிரலில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி மின்சார ரெயில் சென்றது. கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது அங்கிருந்த மேல்நிலை மின்கம்பி அமைப்பின் தாங்கு கம்பியில் ரெயில் பெட்டியின் சிறிய அளவிலான படிக்கட்டு சிக்கியதாக கூறப்படுகிறது.

பயணிகள் அதிர்ச்சி

இதனால் படிக்கட்டு உடைந்து தொங்கியது. தண்டையார்பேட்டை, வ.உ.சி. நகர் ரெயில் நிலைய நடைமேடைகளில் படிக்கட்டு உரசியபடி சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்திய டிரைவர், இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

ரெயில்வே ஊழியர்கள் சேதமடைந்த படிக்கட்டை சீரமைத்தனர். அதன்பிறகு அந்த ரெயில் மீண்டும் கும்மிடிப்பூண்டிக்கு புறப்பட்டு சென்றது. இதனால், ரெயில் பயணிகள் இடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com