உலகின் மிகச்சிறந்த உணவுகள் கிடைக்கும் 100 நகரங்கள் - பட்டியலில் இடம்பெற்ற சென்னை


உலகின் மிகச்சிறந்த உணவுகள் கிடைக்கும் 100 நகரங்கள் - பட்டியலில் இடம்பெற்ற சென்னை
x
தினத்தந்தி 4 July 2025 2:58 PM IST (Updated: 4 July 2025 3:12 PM IST)
t-max-icont-min-icon

'மிகச்சிறந்த உணவுகள் கிடைக்கும் 100 நகரங்கள்' என்ற பட்டியலில் சென்னை உள்பட இந்தியாவின் 6 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

சென்னை,

உலகின் 'மிகச்சிறந்த உணவுகள் கிடைக்கும் 100 நகரங்கள்' என்ற பட்டியலை 'டேஸ்ட் அட்லஸ்'(Taste Atlas) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் இணையதளத்தில், உலகம் முழுவதும் உள்ள பாரம்பரிய உணவு வகைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அது தொடர்பான விமர்சன மதிப்புரைகள் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.

இந்த நிலையில், 'டேஸ்ட் அட்லஸ்' நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள உலகின் 'மிகச்சிறந்த உணவுகள் கிடைக்கும் 100 நகரங்கள்' என்ற பட்டியலில் சென்னை உள்பட இந்தியாவின் 6 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் மும்பை 5-வது இடத்தை பிடித்துள்ளது.

அதை தொடர்ந்து அமிர்தசரஸ் 43-வது இடத்தையும், டெல்லி 45-வது இடத்தையும், ஐதராபாத் 50-வது இடத்தையும் பிடித்துள்ள நிலையில், கொல்கத்தாவிற்கு 71-வது இடமும், சென்னைக்கு 75-வது இடமும் வழங்கப்பட்டுள்ளது. வடபாவ், பாவ் பாஜி, பாம்பே பிரியாணி, அமிர்தசரி குல்சா, சோலே பதுரே, பட்டர் சிக்கன், ரசகுல்லா, தோசை, இட்லி ஆகியவை இப்பட்டியலில் பிரபல உணவுகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

1 More update

Next Story