சென்னை: வேன் பழுதுபார்க்கும் கடையில் தீ விபத்து

சென்னை கொரட்டூர், வாட்டர் கேனல் சாலையில் உள்ள வேன் பழுதுபார்க்கும் கடையில் ஒரு வேனில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
சென்னை: வேன் பழுதுபார்க்கும் கடையில் தீ விபத்து
Published on

சென்னை,

சென்னை கொரட்டூர், வாட்டர் கேனல் சாலையில் வேன் பழுதுபார்க்கும் கடை உள்ளது. அங்கே நேற்று இரவு ஒரு வேனில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வில்லிவாக்கம், அம்பத்தூர் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதற்குள் 3-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து தீயில் கருகி நாசமாயின. இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com