சென்னை கிண்டி சிறுவர் பூங்கா தற்காலிகமாக மூடல்

பறவை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக சென்னை கிண்டி சிறுவர் பூங்கா தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
சென்னை கிண்டி சிறுவர் பூங்கா தற்காலிகமாக மூடல்
Published on

தமிழ்நாடு வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா உடனடியாகவும், அடுத்த அறிவிப்பு வரும் வரையும் பொதுமக்கள் வருகைக்கு மூடப்படுகிறது. கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில் உள்ள வேடந்தாங்கல் ஈரநிலப் பறவைகள் கூண்டில் சில பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்வகையில் பூங்கா தற்காலிகமாக மூடப்படுகிறது.

இந்திய அரசால் வெளியிடப்பட்ட பறவைக்காய்ச்சல் தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைத் திட்டம்(திருத்தம் 2021) வழிகாட்டுதல்களையும், முன்னர் வழங்கப்பட்ட அறிவுரைகளையும் துறை மூலம் முறையாக பின்பற்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

X

Daily Thanthi
www.dailythanthi.com