சென்னை: மாணவனை சுத்தியால் தாக்கிய உடற்பயிற்சி ஆசிரியர் கைது

சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவனை, உடற்பயிற்சி ஆசிரியர் உலோக சுத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
உடற்பயிற்சி ஆசிரியர் கைது
Published on

சென்னை,

சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவனை சுத்தியால் தாக்கிய உடற்பயிற்சி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

6-ம் வகுப்பு மாணவன் மீது சுத்தியால் தாக்குதல்

சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவனை, உடற்பயிற்சி ஆசிரியர் உலோக சுத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மாணவனின் கை எலும்பு முறிவடைந்து, ரத்தக் கசிவும் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உடற்பயிற்சி ஆசிரியர் கைது

இது தொடர்பாக அந்த மாணவனின் தாயார் அளித்த புகாரின்பேரில், ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடற்பயிற்சி ஆசிரியர் நவீன் ஜூட் கோனே (வயது 45) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com