

சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில், வாகனங்களின் முன் பம்பர் (தடுப்பு கம்பிகள்) பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் வாகனங்களில் பம்பர்கள் அகற்றப்படவில்லை. மத்திய அரசின் உத்தரவை மாநில அரசு மீறக்கூடாது.
சாதாரண பொதுமக்களின் வாகனங்களில் பம்பர்களை அகற்றும் அதிகாரிகள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் வாகனங்களில் இருந்து பம்பர்களை அகற்றாதது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சட்டத்துறை செயலாளர், போக்குவரத்து செயலாளர் ஆகியோருக்கு மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் வாகனங்களில் தடுப்பு கம்பிகள் பயன்படுத்த தடை விதிக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், இந்த மனுவில் பொதுநலன் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.