

சென்னை,
அம்பை, பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பை, பெருந்துறை ஆகிய 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் நெல்லையைச் சேர்ந்த வக்கீல் கே.வெங்கடாஜலபதி என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில், இந்த 5 தொகுதிகளி லும் வெற்றி பெற்றவர்களை எதிர்த்து தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதி பதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, ஜி.அருள்முருகன் ஆகியோர், 5 தொகு திகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தடை விதித்து கடந்த ஜூலை 10-ந்தேதி இடைக்கால உத்தரவு பிறப் பித்திருந்தனர்.
இந்த தடையை நீக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் உள்ளிட்டோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இதனையடுத்து வழக்கின் தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பிப்பதாக சென்னை ஐகோட்டு நேற்று அறிவித்தது.
இந்த நிலையில், வழக்கில் இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதன்படி, அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அம்பாசமுத்திரம், பெருந்துறையில் இடைத்தேர்தல் நடத்தலாம் என்றும் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலையில் தேர்தல் நடத்த தடை நீடிக்கிறது என்று தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் வழக்கு முடிந்தால் மட்டுமே திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை தொகுதிகளில் தேர்தல் நடத்த அனுமதிக்க முடியும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
ஐகோர்ட்டின் தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. விஸ்.பாபு மறைந்ததை தொடர்ந்து அந்த தொகுதியும் காலியாக உள்ளது. ஆகையால் இந்த இரண்டு தொகுதிகளுடன் சேர்த்து கொளத்தூர் இடைத்தேர்தலுக்கும் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.