சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் 27-ந் தேதி பதவியேற்பு

சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் 27-ந் தேதி பதவியேற்கிறார்.
சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் 27-ந் தேதி பதவியேற்பு
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டின் (பொ) தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஆர். மகாதேவன் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, அந்த பதவி காலியானது. இதையடுத்து அந்த பதவிக்கு மும்பை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்தது.

தொடர்ந்து கொலீஜியம் அளித்த பரிந்துரைப்படி சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ஸ்ரீராமை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 21-ந் தேதி உத்தரவை பிறப்பித்தார்.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் வரும் வெள்ளிக்கிழமை (27-ந் தேதி) காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com