ரெயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க நடவடிக்கை - கேரள அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

ஏ.ஐ. கேமராக்களை பயன்படுத்தி தமிழக அரசு வெற்றி கண்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
ரெயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க நடவடிக்கை - கேரள அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
Published on: 

சென்னை,

தமிழக-கேரள எல்லையில் ரெயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இதனை தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

ஏ.ஐ. கேமராக்கள்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரெயில் தண்டவாளங்களில் கேரள அரசு ஏ.ஐ. கேமராக்களை அமைக்க வேண்டும் எனவும், இன்னும் 2 மாதங்களில் இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

தமிழக அரசு

ஏ.ஐ. கேமராக்களை பயன்படுத்தி தமிழக அரசு வெற்றி கண்டுள்ளதாகவும், தமிழக அரசு அமைத்திருப்பதைப் கேரள அரசும் யானைகளின் உயிரிழப்பை தடுக்க ஏ.ஐ. கேமராக்களை பயன்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

X