சீமான் மீது வழக்கு பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு


சீமான் மீது வழக்கு பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 20 Aug 2025 3:15 PM IST (Updated: 20 Aug 2025 4:36 PM IST)
t-max-icont-min-icon

நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்தும் ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், போலீசில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், புகார் மீது வழக்குப்பதிய உத்தரவிடக் கோரி எழும்பூர் கோர்ட்டில் சார்லஸ் அலெக்சாண்டர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், புகார் மீது வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

1 More update

Next Story