ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்க வேண்டும் என்ற உத்தரவு ரத்து - சென்னை ஐகோர்ட்டு

தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்பட்டன.
ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கத்தில் இருந்துதான்  இயக்க வேண்டும் என்ற உத்தரவு ரத்து - சென்னை ஐகோர்ட்டு
Published on

சென்னை,

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்றும் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி மாநில போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஆம்னி பஸ் நிறுவனங்கள், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

கிளாம்பாக்கம் பஸ் நிலையம் - ஆம்னி பஸ்கள்

அப்போது, தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்துதான் இயங்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக ரத்து செய்தது.

பயணிகள் நலனை கருத்தில் கொண்டு கோயம்பேடு , போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு மற்றும் மாதவரம் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் பயணிகளை ஏற்றி மற்றும் இறக்குவதற்கு ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஆம்னி பஸ் ஆபரேட்டர்களுக்கும், பயணிகளுக்கும் நிம்மதியையும், தற்காலிக தீர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com