எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. #HighCourt #SVeShekher
எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
Published on

சென்னை,

பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும், நிறுவனங்களில் பணி புரிவது குறித்தும் மிகவும் தரக்குறைவான கருத்தை பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். எஸ்.வி.சேகரின் இந்த பேஸ்புக் பதிவுக்கு எதிர்ப்பு வலுத்ததையடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்து மேற்கூறிய சர்ச்சைக்குரிய பதிவை எஸ்.வி சேகர் நீக்கிவிட்டார். எனினும் எஸ்.வி சேகரின் செயலுக்கு எதிர்ப்புகள் வலுத்தன. எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

புகார் மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவுக்கு மாற்றப்பட்டு அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தாம் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கோரி எஸ்.வி சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்க விசாரித்த சென்னை ஐகோர்ட், எஸ்.வி சேகரை காவல்துறை கைது செய்ய தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.

கோடைக்கால முதல் அமர்வில் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com