திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
Published on

சென்னை,

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மே 23 ஆம் சென்னை மெரினாவில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இலங்கையில் கடந்த 2009 -ஆம் ஆண்டு நடைபெற்ற இனப் படுகொலையை கண்டித்து நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினார்.

ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி மெரினாவில் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை, காவல்துறை அனுமதியின்றி நிகழ்ச்சியை நடத்திய திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த நிலையில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய கோரி திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com