

சென்னை,
மும்பை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பெங்களூரு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வரிஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து சென்னை, பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறார்கள்.
இதில் சென்னை நிறுவனத்தில் பெங்களூரு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். ஊழியர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மேலும் காவல்துறை பாதுகாப்போடு இந்த சோதனை நடைபெற்று வருகிறது.