'சென்னை காளிகாம்பாள் கோவில் அறங்காவலர் தேர்தலை ரத்து செய்ய முடியாது' - ஐகோர்ட்டு

சென்னை காளிகாம்பாள் கோவில் அறங்காவலர் தேர்தலை ரத்து செய்ய முடியாது என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
'சென்னை காளிகாம்பாள் கோவில் அறங்காவலர் தேர்தலை ரத்து செய்ய முடியாது' - ஐகோர்ட்டு
Published on

சென்னை,

சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கேவில் அறங்காவலர் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்றும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி தேவஸ்தான உறுப்பினர் ஜெயராஜகேபால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தெடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்பேது தேர்தல் முறையாக நடந்துள்ளதால், தேர்தலை ரத்து செய்யக்கேர முடியாது என கேவில் அறங்காவலர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேர்தலை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டார். மேலும் அறநிலையத்துறை சட்டப்படி, அறங்காவலர்களை தகுதி நீக்கம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்தான் முறையிட வேண்டும் என்பதால், வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com