

சென்னை
சென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் ஆய்வு நடத்தினார்.அப்போது மாத சம்பளத்தை உயர்த்தி தர வேண்டுமென துணை முதலமைச்சரிடம், துப்புரவு தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆய்வு செய்த பின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார் அப்போது கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என கூறினார்.