சென்னை - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் 20-ந் தேதி முதல் வழக்கம்போல் இயங்கும் - தெற்கு ரெயில்வே தகவல்

சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு காலை 6 மணிக்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு செல்லும்.
சென்னை - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் 20-ந் தேதி முதல் வழக்கம்போல் இயங்கும் - தெற்கு ரெயில்வே தகவல்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக பகுதியாக ரத்து செய்யப்பட்டு இருந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில், வரும் 20-ந் தேதி முதல் வழக்கம்போல் இயங்கும்.

சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு காலை 6 மணிக்கு புறப்பட்டு செல்லும் இந்த ரெயில், பின்னர் அன்று பகல் 3.30 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு வழக்கமான அட்டவணைப்படி புறப்பட்டு செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com