மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குப்படுத்துவது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பட்டினம்பாக்கம், லூப் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குப்படுத்துவது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
Published on: 

சென்னை,

மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குப்படுத்துவது குறித்தும், பட்டினம்பாக்கம், லூப் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் குறித்தும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

இன்று (28.11.2026) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், தேனாம்பேட்டை மண்டலம், மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குப்படுத்துவது குறித்துப் பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர், பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் காமராஜர் சாலையில் சாலை மையத்தடுப்புகளில் வைக்கப்பட்டுள்ள அழகு செடிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, தொடர்ந்து பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், வார்டு 125-க்குட்பட்ட பட்டினம்பாக்கம், லூப் சாலையில் மாநகராட்சி பணியாளர்கள், காவல்துறை அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளில் நேற்று (27.11.2026) 2 ஜே.சி.பி, 4 லாரிகள், 3 பாப்காட் இயந்திரம், 2 டாடா ஏஸ் இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு, 30 உணவகங்கள், 37 மீன் கடைகள், 12 சிறு கடைகள் (பங் கடைகள்) என மொத்தம் 79 கடைகள் அகற்றப்பட்டது. இப்பணியில் 160 காவல்துறை அலுவலர்கள், 20 போக்குவரத்து காவல் அலுவலர்கள், 50 மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, 27 மீன் கடைகள், 16 சிறு கடைகள் (பங் கடைகள்) என மொத்தம் 43 கடைகள் அகற்றப்பட்டது. இந்த ஆய்வுகளின்போது, மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக், மண்டல அலுவலர் செந்தில்குமரன், மேற்பார்வைப் பொறியாளர் முத்தையா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X