சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதில் எந்த விதி மீறலும் இல்லை- தமிழக அரசு

சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஐகோர்ட்டில் பதில் அளித்து உள்ளார்.#TNGovt | #JayaMemorial | #MGRMemorial | #MadrasHC
சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதில் எந்த விதி மீறலும் இல்லை- தமிழக அரசு
Published on

சென்னை

டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஐகோர்ட்டில் பதில் மனுதாக்கல் செய்து உள்ளார். அதில்

சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை. கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் கொண்டு வரப்படுவதற்கு முன்பே எம்.ஜி.ஆர் நினைவிடம் அமைக்கப்பட்டது. ஆனால் விதிமுறைகள் வருவதற்கு முன்பே எம்.ஜி.ஆர். நினைவிடம் மெரினாவில் அமைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் சமாதி வளாகத்திற்குள் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைய உள்ளதால் விதிமீறல் இல்லை கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் படி, சாலையை நோக்கியபடி நினைவிடம் அமைப்பது சட்ட விரோதமல்ல என்று அரசு பதில் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com