சென்னை: பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் வேலப்பன்சாவடி பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.
சென்னை: பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
Published on

சென்னை,

சென்னை மதுரவாயல் அடுத்த வேலப்பன்சாவடியில் தனியார் பெயிண்ட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் தீ மளமளவென பரவியது. இதனால் அங்கு தொழிற்சாலையில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். தொடர்ந்து தீ கட்டடம் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

புகைமண்டலம்

அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் வேலப்பன்சாவடி பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்தபகுதியில் உள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல், பூந்தமல்லி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com