முதல்வர் கான்வாயில் தொங்கியபடி சென்ற சென்னை மேயர் பிரியா - வைரலாகும் வீடியோ

முதல்வர் கான்வாயில் சென்னை மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் ஆகியோர் தொங்கியபடி சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புயல், மழை பாதிப்பு ஆய்வு செய்ய சென்றபோது, முதல்வர் கான்வாயில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ஆகியேர் தொங்கிய படி சென்ற காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

தென்சென்னையில் புயல் பாதித்த இடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் உள்ளிட்ட இடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து சென்னை காசிமேட்டில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதமடைந்த படகுகளை பார்வையிட்டு மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிலையில் அங்கு செல்லும்போது, சென்னை மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் முதல்வர் கான்வாயில் தொங்கியபடி சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com