வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேயர் பிரியா ஆய்வு

பேசின் பாலம் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திட மேயர் பிரியா அறிவுறுத்தினார்.
வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேயர் பிரியா ஆய்வு
Published on: 

சென்னை,

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

மேயர் பிரியா, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதைத் தொடர்ந்து, திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்று (21.10.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, மேயர் பிரியா பேசின் பாலம் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திடவும், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் அனைத்து கால்வாய்களிலும் நீர் தங்குதடையின்றி சீராகச் செல்வதை உறுதி செய்திடும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ச்சியாக, ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது, மண்டல அலுவலர் சதீஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com